< Back
சினிமா செய்திகள்
இணையத்தில் வைரலாகும் கமலின் புதிய தோற்றம்
சினிமா செய்திகள்

இணையத்தில் வைரலாகும் கமலின் புதிய தோற்றம்

தினத்தந்தி
|
14 Oct 2024 9:08 PM IST

நடிகர் கமல்ஹாசன் தாடி வைத்த புகைப்படத்தை வெளியிட்ட அவரது தயாரிப்பு நிறுவனம், ’புதிய தோற்றம், புதிய பயணம்’ எனக் குறிப்பிட்டுள்ளது.

சென்னை,

இந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் கமல்ஹாசன். இவர் சமீபத்தில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 படத்தில் நடித்து முடித்தார். இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. அதனை தொடர்ந்து தனது 234-வது படமான 'தக் லைப்' படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ளார். 37 வருடங்களுக்கு பிறகு இருவரும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதனை தொடர்ந்து கமலின் 235-வது படத்தை இயக்குனர் பா.ரஞ்சித்தும், 236-வது படத்தை இயக்குனர் நெல்சனும் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தற்போதுவரை வெளியாகவில்லை.

இந்தநிலையில், கமலின் 237-வது படத்தை பிரபல சண்டை பயிற்சியாளர்களான அன்பறிவ் (அன்புமணி, அறிவுமணி) சகோதரர்கள் இயக்க உள்ளனர். இவர்கள் 'மெட்ராஸ்' படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள். இவர்கள் கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி படங்களிலும் பணியாற்றி வருகிறார்கள். இதற்கிடையில் நடிகர் கமல்ஹாசன் வெளிநாடு சென்றுள்ளார்.

இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் தாடி வைத்த புகைப்படத்தை வெளியிட்ட அவரது தயாரிப்பு நிறுவனம், 'புதிய தோற்றம், புதிய பயணம்' எனக் குறிப்பிட்டுள்ளது. இதனால், கமலின் அடுத்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவர் சென்னை திரும்பியதும் 237 வது திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று சொல்லப்படுகிறது. எனவே இந்த லுக், அன்பறிவ் படத்திற்கான லுக்காக இருக்கலாம் என்று ரசிகர்கள் பலரும் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்