< Back
சினிமா செய்திகள்
இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சினிமா செய்திகள்

'இந்தியன் 2' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தினத்தந்தி
|
18 Jun 2024 8:56 AM GMT

கமல்ஹாசன் நடிப்பில் வெளியாக உள்ள 'இந்தியன் 2' படத்தின் ரிலீஸ் தேதி சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை,

இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை 28 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் சங்கர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் கமல் ஹாசன், பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

லைகா மற்றும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன்1-ம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

சமீபத்தில் 'இந்தியன் 2' படத்தில் இடம்பெற்றுள்ள "கதறல்ஸ்" என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி வைரலானது.

இந்த நிலையில் 'இந்தியன் 2' திரைப்படம் ஜூலை 12 -ம் தேதி வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்