ஐதராபாத்தில் 'இந்தியன் - 2' படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி
|ஐதராபாத்தில் ‘இந்தியன் - 2’ திரைப்படத்தின் புரோமோஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
ஐதராபாத்,
'இந்தியன் - 2' திரைப்படத்தின் புரோமோஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்தியன் திரைப்படம் வெளியாகி 28 ஆண்டுகள் கழித்து நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.இப்படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, விவேக், எஸ்.ஜே.சூர்யா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர்.
நடிகர் கமல்ஹாசனின் 'இந்தியன் - 2' படத்திற்காக மிகப்பெரிய அளவில் புரமோஷன்கள் செய்யப்பட்டு வருகிறது. வரும் 12ம் தேதி இந்த படம் சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ள நிலையில் இந்தியாவில் சென்னை, மும்பை உள்ளிட்ட இடங்களில் பிரோமோஷன்களில் ஈடுபட்ட படக்குழுவினர் சிங்கப்பூர், மலேசியாவிலும் பிரமோஷன்களை மிகச் சிறப்பாக நடத்தி முடித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று ஐதராபாத்தில் இந்த படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் பிரம்மாண்டமாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஆறு தினங்களில் இந்த படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் இது குறித்த புரோமோவை லைகா நிறுவனம் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
முன்னதாக இந்த படத்தின் இசை வெளியீடு கடந்த மாதம் 1-ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி இன்று ஐதராபாத்தின் கன்வென்ஷன்ஸ் மைதானத்தில் மாலை 6 மணியளவில் நடக்க உள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. படம் இன்னும் சில தினங்களில் ரிலீசாக உள்ள நிலையில் அது குறித்தும் வீடியோ ஒன்றை லைகா நிறுவனம் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இந்த படத்தின் பிரோமோஷன்களுக்காக சென்னை, மும்பையில் மட்டுமில்லாமல் சிங்கப்பூர், மலேசியா என அடுத்தடுத்த இடங்களுக்கு படக்குழுவினர் சென்று வந்தனர். இந்த படத்தில் நடிகர் சித்தார்த் ஹீரோவாக நடித்துள்ள நிலையில் அவருக்கு அதிகமான காட்சிகள் படத்தில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவரது அப்பாவாக சமுத்திரக்கனி நடித்துள்ளார்.