< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
வெற்றிகளை அறுவடை செய்து உற்சாகமாக வாழுங்கள்..! ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கமல்
|12 Dec 2023 12:21 PM IST
நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளான இன்று அவருக்கு ஏராளமான ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னை,
நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார் .
அதில், 'அருமை நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். இன்றும் என்றும் வெற்றிகளை அறுவடை செய்தபடி உற்சாகமாக வாழ மனதார வாழ்த்துகிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.