< Back
சினிமா செய்திகள்
இயக்குனர் ஷங்கருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த  கமல்ஹாசன்
சினிமா செய்திகள்

இயக்குனர் ஷங்கருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசன்

தினத்தந்தி
|
17 Aug 2023 10:06 PM IST

ஷங்கரின் 60-வது பிறந்த நாளையொட்டி திரைப்பிரபலங்கள் பலர் அவருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

சென்னை,

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான ஷங்கர் பிரமாண்ட இயக்குனராக வலம் வருகிறார். இவரின் முதல் படமான 'ஜென்டில்மேன்' திரைப்படத்திலேயே 2டி அனிமேஷன் போன்றவற்றை பயன்படுத்தி தனக்கான இடத்தை உருவாக்கினார். தொடர்ந்து ரஜினி, கமல், விஜய் என முன்னணி நடிகர்களுடன் பணிபுரிந்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.

இயக்குனர் ஷங்கர் தற்போது கமல் நடிப்பில் 'இந்தியன் -2' திரைப்படத்தை இயக்கி வருகிறார். 27 வருடங்களுக்கு பிறகு உருவாகும் இப்படத்தில் சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் பல்வேறு பிரம்மாண்டங்களை நிகழ்த்தி தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வரும் இயக்குநர் ஷங்கர், இன்று ஆகஸ்ட் 17 தனது 60வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

ஷங்கரின் 60-வது பிறந்த நாளையொட்டி திரைப்பிரபலங்கள் பலர் அவருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் ஷங்கருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்