< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
எழுத்தாளர் இராசேந்திர சோழன் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்
|1 March 2024 10:40 PM IST
பொதுவுடைமைத் தத்துவங்களை எழுதிப் பரவலாக அறியப்பெற்ற முற்போக்காளர் இராசேந்திர சோழன் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சென்னை,
எழுத்தாளர் இராசேந்திர சோழன் மறைவுக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "எண்பதாம் அகவையைத் தொடும் எழுத்தாளர் இராசேந்திர சோழன் காலமாகிவிட்டார். அஸ்வகோஷ் என்கிற புனைபெயரிலும் அவர் எழுதினார்.
சிறுகதைகளைப் புதுப் பாணியில் எழுதி சாதனை படைத்த இராசேந்திர சோழன், டில்லி தேசிய நாடகப் பள்ளியின் பயிற்சியைப் பெற்றுக்கொண்டு, நாடகப் பிரதிகளை உருவாக்கியவர்.
பொதுவுடைமைத் தத்துவங்களை எழுதிப் பரவலாக அறியப்பெற்ற முற்போக்காளர். தீவிரமான மொழிப்பற்றாளரான இராசேந்திர சோழன், தெனாலி ராமன், மரியாதை ராமன் வரிசைக் கதைகளில் கூட, தன் பிரத்யேகப் பார்வையைப் பொருத்தி மறு உருவாக்கம் செய்தவர். அவருக்கு என் அஞ்சலி" என்று தெரிவித்து உள்ளார்.