செயற்கை நுண்ணறிவு படிப்பதற்காக அமெரிக்கா பறந்த கமல்ஹாசன்?
|கமல்ஹாசன் அமெரிக்கா சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
செயற்கை நுண்ணறிவு(ஏஐ) தொடர்பான 90 நாட்கள் படிப்பை படிப்பதற்காக கமல்ஹாசன் அமெரிக்கா சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அங்கு கமல்ஹாசன் 45 நாட்கள் மட்டுமே அந்த படிப்பை தொடர்வார் என்றும், பின்னர் இங்கு வந்து தான் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்றும் கூறப்படுகிறது.
கமல்ஹாசன் நடிப்பில் இந்த வருடம், 'கல்கி 2898 ஏடி' மற்றும் 'இந்தியன் 2' ஆகிய படங்கள் வெளியாகின. இதில் இந்தியன் 2 கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், கல்கி 2898 ஏடி மிகப்பெரிய வெற்றி பெற்றது. கமல்ஹாசன் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் 'தக் லைப்' படத்தில் நடித்து வருகிறார். 36 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணி இணைந்துள்ளது. திரிஷா, சிம்பு, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் படத்துக்கு இசையமைக்கிறார்.
மறுபுறம், கல்கி 2898 ஏடி, இந்தியன் 3 உள்ளிட்ட படங்களும் இவரது வரிசையில் உள்ளன. இதனுடன், அட்லீ இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் படத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.