< Back
சினிமா செய்திகள்
இந்தியன்-2 படத்தை இயக்குகிறேனா? கமல்ஹாசன் விளக்கம்
சினிமா செய்திகள்

இந்தியன்-2 படத்தை இயக்குகிறேனா? கமல்ஹாசன் விளக்கம்

தினத்தந்தி
|
2 Jun 2022 2:31 PM IST

இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் என்றும், இந்தப் படம் கைவிடப்படவில்லை எனவும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன்-2 படப்பிடிப்பில் கிரேன் சரிந்து விபத்து ஏற்பட்டு 2 வருடங்களுக்கு மேலாக முடங்கி உள்ளது. ஷங்கர் தெலுங்கு படத்தை இயக்குவதால் இந்தியன்-2 படம் கைவிடப்பட்டதாக தகவல் பரவியது. இதனை படக்குழுவினர் மறுத்தனர். இந்த நிலையில் ஐதராபாத் சென்ற நடிகர் கமல்ஹாசனிடம் இந்தியன்-2 படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்படுமா? அந்த படத்தை நீங்கள் இயக்குவீர்களா? என்றெல்லாம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து கமல்ஹாசன் கூறும்போது, "நான் இந்தியன்-2 படத்தை இயக்கவில்லை. அந்த படத்தை ஷங்கர் இயக்குவார். இந்தியன்-2 படப்பிடிப்பு விரைவில் தொடங்கும்.தற்போது ராம் சரண் நடிக்கும் படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். அந்த படம் முடிந்ததும், இந்தியன்-2 படப்பிடிப்பு தொடங்கும்'' என்றார்.

மேலும் ஐதராபாத்தில் நடந்த விக்ரம் பட விழாவில் கமல்ஹாசன் பங்கேற்று பேசும்போது, "எனக்கு தெலுங்கில் பல வெற்றிகள் கிடைத்து உள்ளன, நல்ல இயக்குனர்கள் கிடைத்த பாக்கியம் எனக்கு உண்டு. பாலசந்தருடன் 36 படங்களில் பணியாற்றினேன், அதுதான் எனது பிஎச்.டி'' என்றார். விழாவில் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் கலந்து கொண்டார்.

மேலும் செய்திகள்