< Back
சினிமா செய்திகள்
35 வருடங்களுக்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன்
சினிமா செய்திகள்

35 வருடங்களுக்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன்

தினத்தந்தி
|
7 Nov 2022 3:56 PM IST

35 வருடங்களுக்குப் பிறகு இயக்குநர் மணிரத்னத்துடன் நடிகர் கமல்ஹாசன் இணைந்து நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன் நடித்து கடந்த ஜூன் மாதம் வெளியான விக்ரம் படம் வசூல் சாதனை நிகழ்த்தியது. தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு 70 சதவீதத்துக்கும் மேல் முடிந்துள்ளது. இந்த படத்துக்கு பிறகு யாருடைய இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில் நேற்று மாலை கமல்ஹாசன் நடிக்கும் புதிய படத்தை மணிரத்னம் டைரக்டு செய்ய இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்தியன் 2 படம் முடிந்ததும் படப்பிடிப்பை தொடங்க முடிவு செய்து உள்ளனர். கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் 1987-ல் நாயகன் படம் வெளியாகி பெரிய வெற்றி பெற்றது. 35 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் புதிய படத்தில் இணைந்துள்ளனர். இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். கமல்ஹாசன், மணிரத்னம், உதயநிதி இணைந்து தயாரிக்கிறார்கள். படத்தில் நடிக்கும் இதர நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

மேலும் செய்திகள்