< Back
சினிமா செய்திகள்
நடிகர் விஜயின் தளபதி 67 படத்தில் இணையும் கமல்ஹாசன்- விக்ரம் ...!
சினிமா செய்திகள்

நடிகர் விஜயின் தளபதி 67 படத்தில் இணையும் கமல்ஹாசன்- விக்ரம் ...!

தினத்தந்தி
|
24 Jan 2023 1:52 PM IST

லோகேஷ் கனகராஜின் படத்தில் வில்லன்கள் செம மாஸாக வருவார்கள். ஹீரோவை ஓவர்டேக் செய்யும் அளவுக்கு வில்லன்கள் கெத்து காட்டுவார்கள்.

சென்னை

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பட வேலைகள் தொடங்கி உள்ளது. இது விஜய்க்கு 67-வது படம். இந்த படத்தில் நடிக்கும் இதர நடிகர்-நடிகை விவரங்கள் அவ்வப்போது கசிந்து வருகின்றன. இதில் சஞ்சய்தத், அர்ஜுன், கவுதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

கதாநாயகியாக நடிக்க திரிஷா பெயர் அடிபடுகிறது. இந்த நிலையில் பிரபல மலையாள நடிகர் பகத் பாசிலும் விஜய்யுடன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் படத்தில் நடிக்கிறீர்களா என்று பகத் பாசிலிடம் கேட்டபோது, அந்த படத்தில் நானும் இருக்கலாம் என்று கூறியுள்ளார். பகத் பாசில் ஏற்கனவே வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடித்து இருந்தார். விஜய்சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் வந்தார்.

கமல்ஹாசனின் விக்ரம் படத்திலும் இருந்தார். அல்லு அர்ஜுன் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய புஷ்பா படத்தில் பகத் பாசில் நடித்த வில்லன் கதாபாத்திரம் பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது உதயநிதியின் மாமன்னன் படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்திய தகவல்கள் படி நடிகர் கமல்ஹாசன், விக்ரம் ஆகியோரும் தளபதி விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜின் படத்தில் இணைய உள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.

தளபதி 67 படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கமல்ஹாசன் ஒரு சிறப்பு தோற்றத்தில் தோன்றலாம் என கூறப்படுகிறது.

அதுபோல் நடிகர் விக்ரம் விஜய் படத்திற்காக 30 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம். தளபதி 67 படத்தில் ஏற்கனவே ஒரு வில்லன் பட்டாளமே இருக்க, விக்ரம் தான் அவர்களுக்கு எல்லாம் தலைமை வில்லனாம்.

லோகேஷ் கனகராஜின் படத்தில் வில்லன்கள் செம மாஸாக வருவார்கள். ஹீரோவை ஓவர்டேக் செய்யும் அளவுக்கு வில்லன்கள் கெத்து காட்டுவார்கள்.

டைரக்டர் லோகேஷ் கனகராஜால் தொடங்கபட்டது ஆக்ஷன்-கிரைம் திரில்லர் உலகமான லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ் (எல்யூசி).

லோகேஷ் கனகராஜ் எல்யூசி-வை மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சில திட்டங்களுடன் முன்னோக்கி கொண்டு செல்ல உள்ளார், இதில் முக்கியமாக தொடர்ச்சிகள் மற்றும் டுவிஸ்டுகள் இருக்கும்.

அவரது சமீபத்திய பல பேட்டிகளில் லோகேஷ் கனகராஜ், கைதி மற்றும் விக்ரம் ஆகிய தொடர்ச்சிகள் வரும் என உறுதிபடுத்தி உள்ளார்.

திட்டமிட்டபடி விஷயங்கள் நடந்தால், தளபதி 67 வெளியான உடனேயே கைதி 2 தொடங்கும். பின்னர், அவர் விக்ரம் 2 இ படத்தை தொடங்குவார். இதைத் தொடர்ந்து சூர்யாவின் 'ரோலக்ஸ்' கேரகடர் படம் தொடங்கலாம்.

கமல்ஹாசன், கார்த்தி மற்றும் சூர்யா உட்பட எல்யூசியின் அனைத்து முக்கிய கதாபாத்திரங்களும், பஹத் பாசில், விஜய் சேதுபதி, நரேன், அர்ஜுன் தாஸ் மற்றும் முந்தைய எல்யூசியில் படங்களில் முக்கிய வேடங்களில் நடித்த மற்றவர்களும் வரவிருக்கும் அனைத்து படங்களிலும் தோன்றக்கூடும். மறுபுறம், தளபதி 67 புதிய அப்டேட் குறித்து ஜனவரி 26, வியாழன் அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்