< Back
சினிமா செய்திகள்
ஆஸ்கர் மியூசியத்திற்கு விசிட்  அடித்த  கமல்ஹாசன்..!
சினிமா செய்திகள்

ஆஸ்கர் மியூசியத்திற்கு விசிட் அடித்த கமல்ஹாசன்..!

தினத்தந்தி
|
27 July 2023 8:24 PM IST

ஆஸ்கர் மியூஸியத்தில் ‘காட்பாதர்’படத்தை, உலக நாயகன் கமல்ஹாசன் பார்த்து ரசிக்கும் புகைப்படத்தை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்துள்ளார்

வாஷிங்டன்,

சமீபத்தில், இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் "'கல்கி 2898-ஏடி" கிளிம்ப்ஸ் வீடியோ அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான் டியாகோவில் நடைபெற்ற காமிக்-கான் விழாவில் வெளியிடப்பட்டது. இந்த படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடித்துள்ளதால், அவரது கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்த படத்தில் நடிக்கும் கமல், அமெரிக்காவில் தங்கியுள்ளார். தற்போது, அங்குள்ள ஆஸ்கர் மியூஸியத்தில் 'காட்பாதர்'படத்தை, உலக நாயகன் கமல்ஹாசன் பார்த்து ரசிக்கும் புகைப்படத்தை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்துள்ளார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.



மேலும் செய்திகள்