பிறந்தநாள் வாழ்த்துகளுடன் வெளியான போஸ்டர்... சிம்பு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கமல்
|நடிகர் சிம்பு தற்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48-வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
சென்னை,
எஸ்.டி.ஆர் என ரசிகர்களால் அழைக்கப்படும் சிம்பு பல்வேறு காரணங்களால் சில ஆண்டுகள் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார். அதன்பின்னர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்தார். அந்த படம் மெகா ஹிட் ஆனது.
தற்போது நடிகர் சிம்பு தற்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48-வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது. இதனால் இந்த படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருக்கிறது.
தற்காலிகமாக எஸ்.டி.ஆர்-48 என பெயரிடப்பட்டு உள்ள இந்த படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த ஆண்டு வெளியாகவுள்ள இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இதற்கிடையே சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு 'எஸ்.டி.ஆர்-48' படத்தின் சிறப்பு போஸ்டர் இன்று வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசன், சிம்புவிற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக சிறப்பு போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் வலைதள பதிவில், 'அன்புத் தம்பி சிம்பு அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள்' என தெரிவித்துள்ளார். நெருப்புக்கு நடுவில் இரண்டு சிம்பு நேருக்கு நேர் பார்த்துக் கொண்டு
நிற்கும் காட்சியுடன் வெளியான இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.