< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
'தக் லைப்' படத்தின் டப்பிங் பணியில் கமல் - வீடியோ வைரல்
|29 July 2024 11:53 AM IST
நடிகர் கமல்ஹாசன் 'தக் லைப்' படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார்.
சென்னை,
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் படம் 'தக் லைப்'. 36 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணி இணைந்துள்ளது. திரிஷா, சிம்பு, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் படத்துக்கு இசையமைக்கிறார்.
இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கின்றன. ஆக்சன் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. மேலும் இப்படத்தில் கமல்ஹாசன் 3 வேடங்களில் நடிக்கிறார்.
இந்நிலையில் நடிகர் கமல் 'தக் லைப்' படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.