25-வது படத்தில் நடிக்கும் ஜி.வி.பிரகாஷை வாழ்த்திய கமல்
|25-வது படத்தில் நடிக்கும் ஜி.வி.பிரகாஷை நடிகர் கமல்ஹாசன் நேரில் வாழ்த்தினார்.
இசையமைப்பாளராக இருந்து முன்னணி கதாநாயகனாக உயர்ந்துள்ள ஜி.வி.பிரகாஷ் தொடர்ந்து அதிக படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார். தற்போது இன்னொரு புதிய படத்தில் நாயகனாக நடிக்கிறார். இந்த படத்துக்கு 'கிங்ஸ்டன்' என்று பெயர் வைத்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷுக்கு இது 25-வது படம் ஆகும். நடிகர் கமல்ஹாசன் நேரில் வாழ்த்தினார். நாயகியாக திவ்யபாரதி நடிக்கிறார். ஆண்ட்னி, வினோத், சேத்தன், குமரவேல், சபுமோன் ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த படத்தை கமல் பிரகாஷ் டைரக்டு செய்கிறார். கடல் பின்னணியில் ஹாரர் அட்வெஞ்சர்ஸ் படமாக உருவாகிறது.
இந்த படத்துக்கு இசையமைத்து ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து ஜி.வி.பிரகாஷே தனது பேரலல் யுனிவர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிக்கவும் செய்கிறார்.
ஜி.வி.பிரகாஷ் கூறும்போது, "தயாரிப்பாளராக வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. அதற்கான சரியான கதை அமைய வேண்டும். "கிங்ஸ்டன்" கதையைக் கேட்டவுடன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் என்ற நம்பிக்கை கிடைத்தது, உடனடியாக தயாரிக்க முடிவு செய்து பணிகளைத் தொடங்கிவிட்டேன்.
எனது தயாரிப்பு நிறுவனத்தினைத் தொடங்கி வைத்து வாழ்த்து தெரிவித்துள்ள கமல்ஹாசனுக்கு நன்றி. தயாரிப்பாளராகவும் அறிமுகமாகும் எனக்கு அனைவரின் அன்பும், ஆதரவும் தேவை" என்றார். இந்த படத்துக்கு கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்கிறார்.