233-வது படத்தில் ராணுவ வீரராக கமல்..?
|கமல்ஹாசன் நடிக்கும் அவரது 233-வது படத்தை வினோத் டைரக்டு செய்ய இருக்கிறார்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' படம் வெற்றி பெற்று வசூல் சாதனை நிகழ்த்தியது. பிரபாசுடன் 'கல்கி 2898 ஏ.டி' என்ற படத்தில் நடிக்க உள்ளார். இதில் வில்லன் வேடம் ஏற்கிறார்.
கமல்ஹாசன் நடிக்கும் அவரது 233-வது படத்தை வினோத் டைரக்டு செய்ய இருக்கிறார். இவர் ஏற்கனவே சதுரங்க வேட்டை, தீரன் ஆதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, துணிவு ஆகிய படங்களை இயக்கி பிரபலமானவர். தற்போது கமல்ஹாசனுடன் இணைகிறார்.
இந்த படத்துக்காக கமல்ஹாசன் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடும் வீடியோ வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் வினோத் இயக்கும் படத்தில் கமல்ஹாசன் ராணுவ வீரராக நடிப்பதாக தகவல் பரவி உள்ளது. துப்பாக்கி சுடும் பயிற்சியிலும் அவர் ராணுவ உடை அணிந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை வைத்தே அவர் ராணுவ வீரராக நடிப்பதாக பேசுகின்றனர். ஆனாலும் படக்குழுனர் அதை உறுதி செய்யவில்லை. ஏற்கனவே விஸ்வரூபம் படத்தில் ராணுவ அதிகாரியாக கமல்ஹாசன் நடித்து இருந்தார்.