கமலுக்கும், எனக்கும் ஒரு அசத்தலான காட்சி இருக்கு... 'இந்தியன் 3' பற்றி நடிகர் எஸ்.ஜே சூர்யா
|‘இந்தியன் 3’ படத்தில் தனக்கும், கமலுக்கும் இடையிலான காட்சியைப் பற்றி நடிகர் எஸ்.ஜே சூர்யா பகிர்ந்துள்ளார்.
மலேசியா,
'இந்தியன் 2' படத்தை 28 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் சங்கர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் கமல் ஹாசன், பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா மற்றும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் 'இந்தியன் 2' படத்தின் டிரெய்லர் கடந்த 25-ந் தேதி வெளியாகி ரசிகர்களின் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் புரமோசனுக்காக 'இந்தியன் 2' படக்குழுவினர் மலேசியா சென்றுள்ளனர்.
இந்தநிலையில், மலேசியாவில் நடைபெற்று வரும் புரமோசன் நிகழ்ச்சியில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா ஒரு விறுவிறுப்பான தகவல் வெளியிட்டுள்ளார். அது சமூக வலைத்தளத்தில் பரவி வைரலாகி வருகிறது. அதில் 'இந்தியன் 2' படத்தில் சில காட்சிகளில் மட்டுமே நான் நடித்து இருக்கிறேன்.
அதே சமயம் இந்தியன்-3 படத்தில், எனக்கும் கமலுக்கும் ஒரு சூப்பர் காம்பினேஷன் காட்சிகள் உள்ளன. அதில் ஒரு காட்சியில் 'சொடக்கு போட்டு, என்னைப் பார்த்து இங்கே வாடா என்று கூப்பிடுவார்'. அந்த அசத்தலான காட்சியை பார்க்க ரசிகர்களாகிய நீங்கள் 'இந்தியன் 3' படத்திற்காக காத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்தியன் படத்தின் 2-ம் மற்றும் 3 -ம் பாகத்திற்கான படப்பிடிப்பை ஷங்கர் இயக்கி முடித்துள்ளார். இரண்டாம் பாகம் வெளியான அடுத்த சில மாதங்களில் 3 -ம் பாகத்திற்காக அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.