'சிறந்த பிறந்தநாள் பரிசு' - மெஸ்சி கையெழுத்திட்ட ஜெர்சியுடன் கல்யாணி பிரியதர்ஷன்
|ஜெயம் ரவி நடிப்பில் தயாராகி வரும் ஜீனி படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடித்து வருகிறார்.
சென்னை,
பிரபல தென்னிந்திய திரைப்பட நடிகை கல்யாணி பிரியதர்ஷன். இவர், 2017-ல் வெளிவந்த "ஹலோ" திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். இவர் நடித்த முதல் படத்திலேயே சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது மற்றும் 7வது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது ஆகிய இரண்டு விருதுகளை பெற்றார்.
இவர் தமிழில் சிம்பு நடிப்பில் வெளிவந்த மாநாடு திரைப்படம் மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ படத்திலும் நடித்திருந்தார். மேலும், தற்போது ஜெயம் ரவி நடிப்பில் தயாராகி வரும் ஜீனி படத்தில் நடித்து வருகிறார். கடந்த 5-ம் தேதி கல்யாணி தனது 30-வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்நிலையில், மெஸ்சி கையெழுத்திட்ட ஜெர்சியுடன் தான் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதனுடன் பகிர்ந்த பதிவில், கனவுபோல் உள்ளது. இதுதான் எனது சிறந்த பிறந்தநாள் பரிசு. இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.