< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'கள்வன்' படத்தின் ஓ.டி.டி. ரிலீஸ் தேதி அறிவிப்பு
|8 May 2024 6:40 PM IST
ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'கள்வன்' படத்தின் ஓ.டி.டி. ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
பி.வி.ஷங்கர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் 'கள்வன்'. இந்த படத்தில் பாரதிராஜா, இவானா, தீனா, ஜி.ஞானசம்பந்தம், வினோத் முன்னா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். டில்லி பாபு தயாரித்த இந்த படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார்.
கடந்த மாதம் 4-ந்தேதி வெளியான 'கள்வன்' திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இந்த படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டது. இந்நிலையில், இப்படத்தின் ஓ.டி.டி. ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் 'டெண்ட்கொட்டா' செயலியில் வரும் 10-ம் தேதி முதல் வெளியாக உள்ளது.