< Back
சினிமா செய்திகள்
கல்கி 2898 ஏடி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சினிமா செய்திகள்

'கல்கி 2898 ஏடி' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தினத்தந்தி
|
27 April 2024 7:42 PM IST

பிரபாஸ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத்,

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் படம், 'கல்கி 2898'. இதில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உட்பட பலர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.

வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படம், பான் இந்தியா முறையில் உருவாகிறது. அறிவியல் புனைவு திரைப்படமான இதில் பிரபாஸின் அறிமுக வீடியோ சில மாதங்களுக்கு முன் வெளியாகி வரவேற்பை பெற்றது. போலவே, அமிதாப் பச்சனின் தோற்றமும் அண்மையில் வெளியானது.

இப்படத்தின் கதை 6000 ஆண்டுகள் நடக்கும் விஷயங்களை பேசுவதாக இயக்குநர் நாக் அஸ்வின் கூறியிருந்தார். படம் ரூ.600 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகிறது. ஒரே நேரத்தில் இந்தியிலும், தெலுங்கிலும் படமாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இப்படம் வரும் ஜூன் மாதம் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மே மாதம் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், மக்களவைத் தேர்தல் உள்ளிட்ட நிகழ்வுகளால் படத்தின் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டுள்ளது.

சமீபத்தில், 'கல்கி 2989 ஏ.டி' படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அமிதாப் பச்சனின் பாத்திரத்தை தெரிவித்தது.

மேலும் செய்திகள்