< Back
சினிமா செய்திகள்
கல்கி 2898 ஏ.டி- அமிதாப் பச்சனின் கதாபாத்திரம் இதுவா...- டீசர் வைரல்
சினிமா செய்திகள்

கல்கி 2898 ஏ.டி- அமிதாப் பச்சனின் கதாபாத்திரம் இதுவா...- டீசர் வைரல்

தினத்தந்தி
|
22 April 2024 7:41 AM IST

'கல்கி 2989 ஏ.டி படக்குழு புதிய டீசர் ஒன்றை வெளியிட்டு அமிதாப் பச்சனின் பாத்திரத்தை தெரிவித்துள்ளது.

சென்னை,

நடிகர் பிரபாஸ், நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் 'கல்கி 2898 ஏ.டி.' படத்தில் நடிக்கிறார். தீபிகா படுகோனே கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், ராணா, துல்கர் சல்மான், திஷா பதானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

அதிக பொருட்செலவில் அறிவியல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகும் இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. படப்பிடிப்புகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிபோவதாக அறிவிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில், படத்தில் வி.எப்.எக்ஸ் பணிகள் இன்னும் முடிக்கப்படாமல் இருப்பதால் படத்தின் ரிலீஸ் தேதி ஜூன் மாதம் 20-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுவதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், 'கல்கி 2989 ஏ.டி படக்குழு புதிய டீசர் ஒன்றை வெளியிட்டு அமிதாப் பச்சனின் பாத்திரத்தை தெரிவித்துள்ளது. அதன்படி அமிதாப் பச்சன் 'கல்கி 2989 ஏ.டி' படத்தில் அஸ்வத்தாமா என்ற பாத்திரத்தில் நடிக்கிறார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்