'கல்கி 2898 ஏ.டி' பட புஜ்ஜி காரை ஓட்டி மகிழ்ந்த ரிஷப் ஷெட்டி
|காந்தாரா பட நடிகரான ரிஷப் ஷெட்டி, 'கல்கி 2898 ஏ.டி' பட புஜ்ஜி வாகனத்தை ஓட்டிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஹைதராபாத்தில் ரசிகர்கள் கலந்து கொண்ட கண்கவர் வெளியீட்டு நிகழ்வில் - 'கல்கி 2898 ஏ.டி' படத்திலிருந்து பிரபாஸின் சிறந்த நண்பன் மற்றும் எதிர்கால வாகனமான 'புஜ்ஜி' அறிமுகப்படுத்தப்பட்டது. பைரவா என்ற பிரபாஸின் சிறந்த நண்பனாக படம் முழுதும் அவருடன் ஒரு எதிர்கால வாகனம் வருகிறது. இந்த அற்புதமான படைப்பான, 'புஜ்ஜி' யை - நடிகர் பிரபாஸ் ஒரு வீடியோவாக வெளியிட்டார், அவர்கள் ஒன்றாகப் பயணம் செய்த தருணங்களை நினைவு கூர்ந்து, பிரபாஸ் முழு மனதுடன், 'லவ் யூ, புஜ்ஜி' என்று பிரம்மாண்டமான நிகழ்வில் பகிர்ந்துகொண்டார்.புஜ்ஜி காரை நடிகர் நாகசைதன்யா ஓட்டிப் பார்த்துள்ளார்.
காந்தாரா புகழ் ரிஷப் ஷெட்டி 'கல்கி 2898 ஏ.டி' படத்தில் பயன்படுத்தப்பட்ட, எதிர்கால வாகனமான புஜ்ஜியை ஓட்டியது, இப்போது இணையம் முழுதும் பெரும் வைரலாகி வருகிறது. "கல்கி 2898 ஏ.டி" x "காந்தாரா" எனும் டேக்குடன் புஜ்ஜியை தான் ஓட்டும் வீடியோவை ரிஷப் ஷெட்டி டிவிட்டரில் பகிர, ரசிகர்கள் அதனைக் கொண்டாடி பகிர்ந்து வருகின்றனர்.
புஜ்ஜியை ரிஷப் ஷெட்டி ஓட்டும் வீடியோ கல்கி படத்தின் எதிர்பார்ப்பைக் கூட்டுகிறது. ரசிகர்கள் மத்தியில் கல்கி திரைப்படம் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.
'கல்கி 2898 ஏ.டி' படத்தின் முன்னணி நடிகரான பிரபாஸுக்கு ரிஷப் ஷெட்டி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து, பிரபாஸின் மீதான தனது அன்பை வெளிப்படுத்தினார். மேலும் நாளை திரையரங்குகளில் படத்தைப் பார்த்து ரசிக்குமாறும் அவர் ரசிகர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
இயக்குநர் நாக் அஷ்வின் இயக்கத்தில், வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள, 'கல்கி 2898 ஏ.டி' திரைப்படத்தில், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி ஆகிய நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ளனர், இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.