< Back
சினிமா செய்திகள்
கல்கி 2898 ஏ.டி படத்தின் முதல் வீடியோ பாடல் வெளியானது
சினிமா செய்திகள்

'கல்கி 2898 ஏ.டி' படத்தின் முதல் வீடியோ பாடல் வெளியானது

தினத்தந்தி
|
29 Jun 2024 11:34 AM GMT

பிரபாஸ் நடித்துள்ள 'கல்கி 2898 ஏ.டி' படத்தின் முதல் வீடியோ பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

சென்னை,

பாகுபலி படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய திரையுலகின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்த பிரபாஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் 'கல்கி 2898 ஏ.டி'.நடிகர்கள் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன் இணைந்து இப்படத்தில் நடித்துள்ளதால், ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்தது.

இப்படத்தின் கதை 6000 ஆண்டுகள் நடக்கும் விஷயங்களை பேசுவதாக இயக்குநர் நாக் அஸ்வின் கூறியிருந்தார். படம் ரூ.600 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. கமல்ஹாசன் வில்லனாக நடித்துள்ளார்.

நாக் அஸ்வின் இயக்கியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படம் ஜூன் 27 திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.முக்கியமாக, படத்தில் இடம்பெற்ற கிராபிக்ஸ் காட்சிகளும் கமல்ஹாசனின் தோற்றமும் பெரிதும் பாராட்டுகளைப் பெற்று வருகின்றன.

இந்த நிலையில் 'கல்கி 2898 ஏ.டி' படத்தில் இடம்பெற்றுள்ள பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்