< Back
சினிமா செய்திகள்
கமல்ஹாசன் அடக்கமாக இருக்கிறார் அவருடன் நடிப்பது பெருமை -   அமிதாப் பச்சன்
சினிமா செய்திகள்

"கமல்ஹாசன் அடக்கமாக இருக்கிறார்" அவருடன் நடிப்பது பெருமை - அமிதாப் பச்சன்

தினத்தந்தி
|
21 July 2023 1:33 PM IST

அறிவியல் புனைகதை படமான 'கல்கி 2898' (புராஜக்ட் கே) படத்தின் முதல் டீசர் வெளியாகி உள்ளது.படம் 2898ல் பூமியில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது.

ஐதராபாத்

வைஜெயந்தி மூவிஸ் பேனரில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் திரைப்படம் 'புராஜக்ட் கே'. இப்படத்தை நாக் அஸ்வின் இயக்குகிறார்.

ரூ.600 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் நடிகர்கள் ராணா டகுபதி, கமல்ஹாசன், அமிதாப்பச்சன், பசுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இப்படத்தின் முதல்பார்வை போஸ்டரை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில் இப்படத்திற்கு 'கல்கி 2898' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

அறிவியல் புனைகதை படமான 'கல்கி 2898' (புராஜக்ட் கே) படத்தின் முதல் டீசர் வெளியாகி உள்ளது.படம் 2898ல் பூமியில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது.

அமெரிக்காவில் நடைபெற்ற காமிக் கான் நிகழ்வில் முதல் டீசரைபடக்குழு வெளியிட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ,கமல்ஹாசன், பிரபாஸ், இயக்குனர் நாக் அஸ்வின் உள்பட புராஜெக்ட் கே படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

2023 ஆம் ஆண்டு சான் டியாகோ காமிக்-கானில் (எஸ்டிசிசி) அறிமுகமான முதல் இந்தியத் திரைப்படமாக புராஜெக்ட் கே வரலாற்றை உருவாக்கி உள்ளது. நிகழ்ச்சிக்கு முன், நியூயார்க் நகரத்தின் டைம்ஸ் சதுக்கத்தில் புராஜெக்ட் கேக்கான விளம்பரப் பலகை பார்வையாளர்களுக்காக வெளியிடப்பட்டது.

நிகழ்ச்சியில் அமிதாப்பச்சனைப் பற்றி பேசிய கமல்ஹாசன்,அமிதாப்பச்சன் ஜி வாழும் காலத்தில் வாழ்வதில் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம் என கூறினார்.

இதற்கு வீடியோகாலில் பேசிய அமிதாப், "இவ்வளவு அடக்கமாக இருப்பதை நிறுத்துங்கள் கமல். எங்கள் அனைவரையும் விட நீங்கள் மிகவும் பெரியவர்" என்று நகைச்சுவையாக கூறினார்.

தொடர்ந்து அவர் பேசும் போது கமலின் ஒவ்வொரு படமும் யதார்த்தத்தால் நிரம்பியுள்ளது. ஒவ்வொரு படத்திலும் அவர் எவ்வளவோ உழைக்கிறார். அவர் நடித்த பாத்திரங்கள் மிகவும் அற்புதமானவை. அவர் நடித்த அதே படத்தில் நடிப்பது பெருமை. நாங்கள் ஒன்றாக இரண்டு படங்கள் செய்துள்ளோம் ஆனால் இந்தப்படம் மிகவும் சிறப்பானதாக இருக்கும் என கூறினார்.

கமல்ஹாசன் பேசும் போது,

"நான் ஷோலேயில் உதவி இயக்குநராக இருந்தேன். நான் படத்தை பார்த்த இரவு என்னால் தூங்க முடியவில்லை. அந்த படத்தை வெறுத்தேன். ஒரு சிறந்த திரைப்பட தயாரிப்பாளருடன் பணிபுரியும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது, ஒரு டெக்னீஷியனாக, அன்று இரவு என்னால் தூங்க முடியவில்லை, அமித்ஜி இதுபோன்ற பல திரைப்படங்களைச் செய்துள்ளார். என் படங்களைப் பற்றி அவர் நன்றாகச் சொல்வது நான் நினைத்துப் பார்க்காத ஒன்று என கூறினார்.

மேலும் செய்திகள்