'ஜெயிலர்' வெற்றி - இயக்குநர் நெல்சனுக்கு காசோலை வழங்கி பாராட்டிய கலாநிதி மாறன்
|இது தொடர்பான புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை,
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதுவரை 'ஜெயிலர்' திரைப்படம் ரூ.525 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து இருப்பதாக படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
இந்த நிலையில், தயாரிப்பாளர் கலாநிதி மாறன் நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்தார். அதில் ரஜினிக்கு, கலாநிதி மாறன் காசோலை வழங்கினார்.இதனை தொடர்ந்து BMW காரை ரஜினிக்கு பரிசாக வழங்கினார்.
இந்த நிலையில் இயக்குனர் நெல்சனை இன்று கலாநிதி மாறன் சந்தித்தார். தொடர்ந்து அவருக்கு காசோலை வழங்கி கலாநிதி மாறன் பாராட்டினார். இது தொடர்பான புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.