< Back
சினிமா செய்திகள்
உண்மையில் பதான் வசூல் எவ்வளவு...? ஷாருக்கானிடம் கஜோல் கேட்ட கேள்வி சர்ச்சையானது...!
சினிமா செய்திகள்

"உண்மையில் பதான் வசூல் எவ்வளவு...?" ஷாருக்கானிடம் கஜோல் கேட்ட கேள்வி சர்ச்சையானது...!

தினத்தந்தி
|
17 July 2023 11:04 AM IST

"உண்மையில் பதான் வசூல் எவ்வளவு...?" ஷாருக்கானிடம் கஜோல் கேட்ட கேள்வி சர்ச்சையானது...!

மும்பை

ஷாருக்கான் நடிப்பில் 4 வருட இடைவெளிக்கு பிறகு வெளியான படம் பதான். உலகம் முழுவதும் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தி உள்ளது. அடுத்தடுத்து தோல்வி படங்களை பார்த்து துவண்டு கிடந்த இந்தி பட உலகம் இந்த வெற்றியால் உற்சாகமாகி உள்ளது.

ஷாருக்கான் சினிமா வாழ்க்கையில் அதிக வசூல் செய்த படம் என்ற பெயரையும் பதான் பெற்றுள்ளது. இந்த படத்தில் தீபிகா படுகோனே காவி நிறத்தில் நீச்சல் உடை அணிந்து ஷாருக்கானுடன் கவர்ச்சி நடனம் ஆடினார். இதனால் படத்தை புறக்கணிக்கும்படி எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் அதையும் மீறி வெற்றி பெற்றுள்ளது.

2023 ஆம் ஆண்டு பாலிவுட்டில் அதிக வசூல் செய்த படம் இதுவாகும். தற்போது நடிகை கஜோலின் பதான் குறித்த ஒரு கேள்வி பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.

கஜோல் ஷாருக்கின் நெருங்கிய நண்பர். மேலும் பல படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். கஜோல் பதான் உண்மையில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்று ஷாருக்கிடம் கேட்டுள்ளார். கஜோலின் ஹாட்ஸ்டார் தொடரான தி டிரயல்-பியார் கானூன் தோகாவின் விளம்பரத்தின் போது ஊடகங்களிடம் கஜோல் இவ்வாறு கேள்வி எழுப்பினார். பதான் உண்மையில் எவ்வளவு வசூல் செய்தார் என்பதை அறிய விரும்புவதாக கஜோல் கேள்வி எழுப்பினார்.

இப்போது ஷாருக்கானிடம் என்ன கேட்க விரும்புகிறீர்கள்? என்ற கேள்விக்கு சிறிது நேரம் யோசித்த கஜோல், "அவரிடம் கேட்கிறேன், உண்மையில் பதான் எவ்வளவு வசூல் செய்தார்?"என கேட்டுவிட்டு கஜோல் சிரித்தார்.

எது எப்படியோ, நகைச்சுவையாக இருந்தாலும், கஜோலின் கேள்வி சமூக வலைதளங்களில் அதிகம் விவாதிக்கப்படுகிறது. கஜோலின் கேள்வி, பதானின் வசூல் உண்மையானதா என்ற விவாதத்தை தூண்டியதாக சிலர் வாதிடுகின்றனர்

"பதான் செய்த வியாபாரத்தை கஜோல் கேலி செய்து உள்ளார். அதாவது அஜய் தேவ்கன் அவர்கள் வீட்டில் ஷாருக்கின் போலிப் புள்ளிவிவரங்களைப் பற்றி விவாதித்திருப்பார். உண்மையில் இது பாலிவுட்டின் நிலை என கூறி உள்ளது என குறிப்பிட்டு உள்ளார்.



மேலும் செய்திகள்