கணவர் தயாரிக்கும் வெப்சீரிஸ்: லிப்-லாக் காட்சியில் அம்மா நடிகை கஜோல்...!
|கணவர் அஜய் தேவ்கன் தயாரிக்கும் தொடரில் நடித்துள்ள கஜோல் பல சூடான காட்சிகளிலும், லிப்-லாக் காட்சிகளிலும் தோன்றி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்து உள்ளார்.
மும்பை
நடிகை கஜோல், திரையில் முத்தமிடக் கூடாது என்ற தனது நீண்டகால கொள்கையை உடைத்ததற்காக சமீபத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளார்.
'மின்சார கனவு' படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டவர் இந்தி நடிகை கஜோல். இதன் பின்னர் 20 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு 'வேலையில்லா பட்டதாரி-2' படத்தில் நடித்திருந்தார். இன்றளவும் இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் கஜோல்.
தற்போது சினிமா தவிர வெப்சீரிஸ்களிலும் நடித்து வரும் கஜோல், சமீபத்தில் நெட்பிலிக்சில் வெளியான லஸ்ட் ஸ்டோரிஸ் 2 தொடரில் நடித்திருந்தார். இதில் கணவரால் துன்புறுத்தப்படும் மனைவியாகவும், விலைமாதுவாகவும் பல துணிச்சலான காட்சியில் நடித்திருந்தார் கஜோல்.
இதைத்தொடர்ந்து கடந்த வாரம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியான 'தி டிரையல்' என்ற வெப் தொடரில் நடித்திருக்கும் கஜோல், அதில் தன்னுடன் இணைந்து நடித்த பாகிஸ்தான் நடிகரான அலி கானுக்கு லிப்-லாக் முத்தம் கொடுக்கும் காட்சியில் நடித்து இருந்தார். இதில் மற்றொரு சிறப்பு அம்சம் என்னவென்றால் இந்த வெப் தொடரை கஜோலின் கணவர் அஜய் தேவ்கன் தான் தயாரித்துள்ளார். 29 ஆண்டுகளுக்குப் பிறகு திரையில் முத்தமிடக் கூடாது என்ற கொள்கையை உடைத்துள்ளார்.
திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் கஜோல், இதுபோன்ற காட்சிகளில் நடித்திருப்பது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது.
கணவர் தயாரித்த தொடரிலேயே இதுபோன்ற சூடேற்றும் காட்சிகளில் நடித்துள்ள கஜோலை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.