< Back
சினிமா செய்திகள்
புதிய படத்திற்காக தற்காப்பு கலைகளை கற்றுக்கொண்ட காஜல் அகர்வால்
சினிமா செய்திகள்

புதிய படத்திற்காக தற்காப்பு கலைகளை கற்றுக்கொண்ட காஜல் அகர்வால்

தினத்தந்தி
|
1 Dec 2023 4:02 AM IST

காஜல் அகர்வால் நடிக்கும் ‘இந்தியன் 2’ மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத்,

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் காஜல் அகர்வால் திருமணத்துக்கு பிறகும் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவருக்கு தற்போது ஒரு ஆண் குழந்தை உள்ளது. தற்போது கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால் நடிக்கும் 'இந்தியன் 2' மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. .

இந்த நிலையில் தெலுங்கில் 'சத்யபாமா' என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதற்க்காக அவர் சண்டை பயிற்சிகள் கற்று நடிக்கிறார். இதுகுறித்து காஜல் அகர்வால் கூறியதாவது, ''சத்தியபாமா படத்தின் கதையை கேட்டு வியந்து போனேன். இதில் நடித்தே ஆகவேண்டும் என்று முடிவு செய்தேன். தற்போது படப்பிடிப்பு தொடங்கி உள்ள நிலையில் இதில் நடிப்பதற்காக ஐதராபாத்துக்கு குடும்பத்தோடு வந்து தங்கி இருக்கிறேன். குழந்தையை கவனித்துக்கொண்டே படப்பிடிப்பிலும் பங்கேற்கிறேன், என்று கூறினார்.

மேலும் 'சத்யபாமா' படத்துக்காக தற்காப்பு கலை சண்டைகளை கற்றுக்கொண்டேன். விஜயசாந்தியை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு அதிரடி சண்டை காட்சிகளில் நடித்து வருகிறேன். படப்பிடிப்பு 65 சதவீதம் முடிந்துள்ளது'' என்றும் கூறினார்.

மேலும் செய்திகள்