< Back
சினிமா செய்திகள்
Kajal Aggarwal Joining Rashmika Mandana and Salman Khans film?
சினிமா செய்திகள்

ராஷ்மிகா மந்தனா, சல்மான் கானுடன் இணைகிறாரா காஜல் அகர்வால்?

தினத்தந்தி
|
10 Sept 2024 11:58 AM IST

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக பாலிவுட் நடிகர் சன்மான்கான் நடிக்கிறார்.

சென்னை,

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக பாலிவுட் நடிகர் சன்மான்கான் நடிக்கிறார். சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கும் இப்படத்திற்கு 'சிக்கந்தர்' என்று 'பெயர் ' வைக்கப்பட்டுள்ளது.

"புராணக் கதை'யை அடிப்படையாக கொண்ட இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலா தயாரிக்கிறார். மேலும் சல்மான்கான் 10 ஆண்டுகளுக்கு பிறகு தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலாவுடன் இணைந்து உள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியது. இந்நிலையில், இப்படம் தொடர்பான முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, சிக்கந்தர் படத்தில் ராஷ்மிகா மந்தனா, சல்மான் கானுடன், காஜல் அகர்வால் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில் ஏற்கனவே ராஷ்மிகா மற்றும் சல்மான் முக்கிய வேடங்களில் நடிக்கும்நிலையில், காஜல் எந்த பாத்திரத்தில் நடிப்பார் என்பது சுவாரஸ்யமாக இருக்கும்.

மேலும், சத்யராஜும் இப்படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு சிக்கந்தர் வெளியாகும் என சல்மான்கான் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்