< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்

வெளியானது 'கோழிப்பண்ணை செல்லதுரை' படத்தின் 'கையேந்தி நிற்பான்' வீடியோ பாடல்

தினத்தந்தி
|
28 Sept 2024 6:53 PM IST

யோகி பாபு நடித்துள்ள ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ படத்தின் ‘கையேந்தி நிற்பான்’ வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.

சென்னை,

தென்மேற்கு பருவக்காற்று, நீர் பறவை, தர்மதுரை' 'மாமனிதன்' ஆகிய வெற்றி படங்களை இயக்கி கவனம் பெற்றவர் இயக்குனர் சீனு ராமசாமி. இவர் தற்போது 'கோழிப்பண்ணை செல்லதுரை' என்கிற பெயரில் புதிய படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் யோகி பாபு, ஏகன், பிரிகிடா, ஐஸ்வர்யா தத்தா, தினேஷ் முத்தையா, சத்யா உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அசோக்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைத்துள்ளார்.

கிராமத்துக் கதைக்களத்தில் அண்ணன் - தங்கை உறவைப் பேசும் படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர், டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. ஆக்லெண்ட் சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான முதல் தமிழ்ப்படம் என்கிற பெயரையும் இது பெற்றுள்ளது.

சமீபத்தில் இப்படத்திலிருந்து, 'காத்திருந்தேன்', 'பொன்னான பொட்டப்புள்ள' , 'தேவதை' என்ற பாடல்கள் வெளியாகி வைரலாகின. இந்த நிலையில், 'கையேந்தி நிற்பான்' என தொடங்கும் புதிய வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

'கோழிப்பண்ணை செல்லதுரை' திரைப்படம் செப்டம்பர் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

மேலும் செய்திகள்