'காதல் குமாரு வைரல் ஆனாரு...' - பாடகரான விஜய் சேதுபதி
|‘கரா' படத்தில் ஜீவா வில்லனாக வருகிறார்.
சென்னை,
'கரா' என்ற பெயரில் புதிய படம் தயாராகிறது. இதில் மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாகவும், சாகிபா பாஸின் நாயகியாகவும் நடிக்கின்றனர். ஜீவா வில்லனாக வருகிறார். மொட்டை ராஜேந்திரன், சேலம் வேங்கை அய்யனார் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்துக்கு அறிமுக இயக்குனர் அவதார், கதை எழுதி டைரக்டு செய்துள்ளார். பவானி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ராஜேஷ்குமார் தயாரித்துள்ளார். நீர் விலங்கு முதலையை மையமாக வைத்து தயாராகிறது இந்த படம். இந்த படத்துக்கு அச்சு ராஜாமணி இசையில் நடிகர் விஜய்சேதுபதி 'காதல் குமாரு வைரல் ஆனாரு...' என்ற பாடலை பாடி இருக்கிறார்.
இந்த பாடல் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பார்க்கும் சிறந்த பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்றும், முதலையின் தூய தமிழ் பெயரான 'கரா' படத்துக்கு தலைப்பாக வைக்கப்பட்டு உள்ளது என்றும் படக் குழுவினர் தெரிவித்து உள்ளனர்.