< Back
சினிமா செய்திகள்
சந்திரமுகி தோற்றத்தை பாராட்டிய ஜோதிகா...!
சினிமா செய்திகள்

சந்திரமுகி தோற்றத்தை பாராட்டிய ஜோதிகா...!

தினத்தந்தி
|
9 Sept 2023 2:27 PM IST

கங்கனாவின் சந்திரமுகி தோற்றம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது

'சந்திரமுகி' படத்தின் இரண்டாம் பாகம் 'சந்திரமுகி 2' என்ற பெயரில் தயாராகி திரைக்கு வர உள்ளது. முதல் பாகத்தில் நடித்த ரஜினிகாந்த் வேடத்தில் லாரன்சும், ஜோதிகாவின் சந்திரமுகி கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத்தும் நடித்துள்ளனர். பி.வாசு டைரக்டு செய்துள்ளார்.

இந்த படத்தில் கங்கனாவின் சந்திரமுகி தோற்றம் மற்றும் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் படம் திரைக்கு வருகிறது. இந்த நிலையில் கங்கனாவின் சந்திரமுகி தோற்றத்துக்கு ஜோதிகா பாராட்டு தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து வலைத்தளத்தில் ஜோதிகா வெளியிட்டுள்ள பதிவில், "இந்திய சினிமாவில் மிகவும் திறமையான நடிகைகளில் ஒருவரான கங்கனா ரணாவத், சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடிப்பதை கண்டு மிகவும் பெருமையடைகிறேன். சந்திரமுகி கதாபாத்திரத்தில் நீங்கள் கவர்ச்சியாக தோற்றமளிக்கிறீர்கள். நான் உங்கள் ரசிகை. இந்த திரைப்படத்தில் உங்களின் நடிப்பை காண ஆவலுடன் காத்திருக்கிறேன். லாரன்சுக்கும், இயக்குனர் பி. வாசுவுக்கும் மீண்டும் ஒரு மாபெரும் வெற்றி கிடைக்க வாழ்த்துக்கள்'' என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்