< Back
சினிமா செய்திகள்
உடன்பிறப்பே 2-ம் பாகத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்த ஜோதிகா
சினிமா செய்திகள்

'உடன்பிறப்பே' 2-ம் பாகத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்த ஜோதிகா

தினத்தந்தி
|
9 April 2024 10:30 AM IST

உடன்பிறப்பே படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்க ஜோதிகா விருப்பம் தெரிவித்து இருக்கிறார்.

சென்னை,

ஜோதிகா, சசிகுமார் நடிப்பில் 2021-ல் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற படம் உடன்பிறப்பே. அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து தயாராகி இருந்தது. இதில் ஜோதிகாவின் அண்ணனாக சசிகுமாரும் கணவராக சமுத்திரக்கனியும் நடித்து இருந்தனர். இரா.சரவணன் டைரக்டு செய்து இருந்தார்

தனது சினிமா வாழ்க்கையில் உடன்பிறப்பே முக்கிய படம் என்று ஜோதிகா தொடர்ந்து கூறிவந்தார். தற்போது இரண்டாம் பாகம் படங்கள் அதிகம் தயாராவதால் உடன்பிறப்பே படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்க ஜோதிகா விருப்பம் தெரிவித்து இருக்கிறார். அதற்கான கதையை உருவாக்கும்படி இயக்குனர் இரா.சரவணனிடம் அறிவுறுத்தி இருப்பதாகவும் அவரும் கதையை தயார் செய்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. உடன் பிறப்பே 2-ம் பாகத்துக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜோதிகா நடிப்பில் கடந்த வருடம் 'காதல் தி கோர்' என்ற மலையாள படம் வந்தது. சமீபத்தில் சைத்தான் என்ற இந்தி படத்திலும் நடித்து இருந்தார். தற்போது மேலும் இரண்டு இந்தி படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார்.

மேலும் செய்திகள்