ஜோடியாக ஒர்க் அவுட் செய்த சூர்யா-ஜோதிகா: வீடியோ வைரல்
|ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சென்னை,
1999-ம் ஆண்டு இயக்குனர் வசந்த் இயக்கத்தில் வெளியான 'பூவெல்லாம் கேட்டுப்பார்' படத்தில் சூர்யாவும் ஜோதிகாவும் முதன்முறையாக ஒன்றாக நடித்தனர்.
இதுவரை இருவரும் இணைந்து மொத்தம் 7 படங்களில் நடித்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு கடந்த 2006-ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் உள்ளனர்.
தற்போது ஜோதிகா சைத்தான் என்ற இந்தி படத்தில் நடித்தார். இந்த படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மேலும் சில இந்தி படங்களில் ஜோதிகா நடிக்க உள்ளார். நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சூர்யாவும் ஜோதிகாவும் ஒன்றாக ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த நடிகர் மாதவன் 'மிக அருமை' என்றும் நடிகை ஷில்பா ஷெட்டி 'வாவ்' என்றும் கருத்து பதிவிட்டுள்ளனர்.