வெப் தொடரில் ஜோதிகா
|ஜோதிகா சமீப காலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். பிறமொழி படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வருகின்றன. மலையாளத்தில் மம்முட்டி ஜோடியாக 'காதல்: தி கோர்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்குவர உள்ளது.
இந்தியில் 'ஶ்ரீ' என்ற பெயரில் தயாராகும் படத்தில் ராஜ்குமார் ராவுடன் நடிக்கிறார். மும்பையில் தங்கி இந்த படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் அடுத்து இந்தியில் 'தாபா கார்டல்' என்ற பெயரில் உருவாகும் வெப் தொடரில் நடிக்கவும் ஜோதிகாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இந்த தொடர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளிலும் வெளியாக இருக்கிறது. இதில் ஜோதிகாவுடன் பிரபல இந்தி நடிகை ஷபானா ஆஸ்மி, இந்தி நடிகர் சுஜ்ராஜ் ராவ் ஆகியோரும் நடிக்கின்றனர். சோனாலி போஸ் டைரக்டு செய்கிறார். ஐந்து குடும்ப பெண்களை மையமாக வைத்து இந்த தொடர் தயாராகிறது. படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.