சமந்தாவை சாடிய விஷ்ணு விஷாலின் மனைவி
|சமந்தாவின் விளக்கத்துக்கு விஷ்ணு விஷாலின் மனைவியும், பேட்மிண்டன் வீராங்கனையுமான ஜுவாலா கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
மயோசிடிஸ் பாதிப்பில் இருந்து மீண்டு வரும் சமந்தா சமீப காலமாக அவர் எடுத்து வரும் சிகிச்சை மற்றும் மருத்துவம் குறித்து பேசியிருந்தார்.
அவர் கூறுகையில், 'வைரல் இன்பெக்ஷன் வந்தால், தண்ணீரில் ஹைட்ரஜன் பெராக்ஸைடு கலந்து நெபுலைஸ் செய்யலாம்' என்றார். இந்த பேச்சு சர்ச்சையானநிலையில் மருத்துவர்கள் உள்பட சிலர் எச்சரித்தனர்.
இதையடுத்து ,'என்னைபோல் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் என்பதற்காக எனக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்த விஷயங்களை தெரிவிக்கிறேன். இதை எனக்கு பரிந்துரைத்த மருத்துவர் 25 வருடங்களுக்கு மேல் பணி அனுபவம் உள்ளவர்' என்று சமந்தா விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில், சமந்தாவின் இந்த விளக்கத்துக்கு நடிகர் விஷ்ணு விஷாலின் மனைவியும், பேட்மிண்டன் வீராங்கனையுமான ஜுவாலா கட்டா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,''சமந்தாவுக்கு ஒரே கேள்வி. ஒருவேளை உங்கள் பரிந்துரை உதவாமல், உயிரிழப்பை ஏற்படுத்தினால் நீங்கள் அதற்கு பொறுப்பேற்பீர்களா? நீங்கள் குறிப்பிடும் மருத்துவரும் பொறுப்பை ஏற்பாரா?' என்று சாடியுள்ளார்.