முதல் குழந்தையை எதிர்பார்த்துள்ள ஜஸ்டின் பீபர்-ஹெய்லி ஜோடி - ரசிகர்கள் வாழ்த்து
|தனது மனைவி ஹெய்லி கர்ப்பம் தரித்திருக்கும் தகவலை ஜஸ்டின் பீபர் மகிழ்ச்சியுடன் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
ஒட்டாவா,
உலகப்புகழ் பெற்ற பாப் பாடகர் ஜஸ்டின் பீபருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். கனடாவைச் சேர்ந்த ஜஸ்டின் பீபரின் முதல் சிங்கிள் பாடல் 'ஒன் டைம்' கடந்த 2009-ம் ஆண்டு வெளியானது. அப்போது அவருக்கு வயது 15. தொடர்ந்து அடுத்த வருடம் அவரது முதல் ஆல்பம் 'மை வேர்ல்டு' வெளியானது.
இதன் பின்னர் வெளியான அவரது அனைத்து ஆல்பம் பாடல்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், இளம் வயதிலேயே ஜஸ்டின் பீபர் சர்வதேச இசைக் கலைஞராக புகழ் பெற்றார். கடந்த 2018-ம் ஆண்டு ஜஸ்டின் பீபர் தனது நீண்ட நாள் காதலியான மாடல் அழகி ஹெய்லியை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் தனது மனைவி ஹெய்லி கர்ப்பம் தரித்திருக்கும் தகவலை ஜஸ்டின் பீபர் மகிழ்ச்சியுடன் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். தங்கள் முதல் குழந்தையின் வருகையை, திருமண நிகழ்வு போல் போட்டோஷூட் நடத்தி ஜஸ்டின் பீபர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதையடுத்து ஜஸ்டின்-ஹெய்லி தம்பதிக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.