விஜய்யை பாராட்டிய ஜூனியர் என்.டி.ஆர்
|'தளபதி 69' படத்தில் விஜய் நடிக்க உள்ளார்.
சென்னை,
நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் விஜய்யை வெகுவாக பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், 'விஜய் நடனமாடும்போது கஷ்டப்பட்டு ஆடுவதுபோல் தெரியாது. மிகவும் அழகாகவும் நிதானத்தோடும் ஆடுவார். அவருடைய நடனத்திற்கு மிகப்பெரிய ரசிகன் நான் ,'என்றார்.
நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தனது 30-வது படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கும் இப்படத்துக்கு 'தேவரா பாகம்-1' என்று பெயரிடப்பட்டுள்ளது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்துள்ளார். வருகிற 27-ந் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளநிலையில், படக்குழு புரொமோசன் பணிகளில் ஈடுபட்டுள்ளது.
மறுபுறம், நடிகர் விஜய் தனது 68-வது படமான 'தி கோட்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் கடந்த 5-ம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி தற்போது வரை ரூ.413 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தை தொடர்ந்து, தனது 69-வது படத்தில் விஜய் நடிக்க உள்ளார். எச்.வினோத் இயக்கும் இப்படம் விஜய்யின் கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது.