ஹாலிவுட் படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்?
|ஹாலிவுட் மார்வேல் உயர் அதிகாரி விக்டோரியா அலோன்சாவை ஜூனியர் என்.டி.ஆர். சந்தித்து பேசி உள்ளார். இதன் மூலம் ஜூனியர் என்.டி.ஆருக்கு மார்வெல் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்திய நடிகர், நடிகைகள் சிலருக்கு ஹாலிவுட் படங்களில் நடிக்க ஏற்கனவே வாய்ப்பு கிட்டி உள்ளது. தனுஷ் நடித்த தி கிரே மேன் ஹாலிவுட் படம் கடந்த வருடம் வெளியானது. இந்த நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆரிடமும் ஹாலிவுட் படத்தில் நடிக்க பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் நடித்த 'ஆர் ஆர் ஆர்' படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடலுக்கு உயரிய கோல்டன் குளோப் விருது கிடைத்தது. அமெரிக்காவில் நடந்த விருது வழங்கும் விழாவில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது ஜூனியர் என்.டி.ஆர் அளித்த பேட்டியில், ''எனக்கு ஹாலிவுட் மார்வெல் படங்களில் நடிக்க விருப்பம் உள்ளது. அந்த வாய்ப்புக்காக காத்துக்கொண்டு இருக்கிறேன். மார்வெல் கதாபாத்திரங்களில் எனக்கு அயன்மேன் மிகவும் பிடிக்கும்'' என்றார்.
இந்த நிலையில் மார்வேல் உயர் அதிகாரி விக்டோரியா அலோன்சாவை ஜூனியர் என்.டி.ஆர். சந்தித்து பேசி உள்ளார். இதன் மூலம் ஜூனியர் என்.டி.ஆருக்கு மார்வெல் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.