< Back
சினிமா செய்திகள்
ஜூனியர் என்.டி.ஆரின் 31வது பட பூஜை
சினிமா செய்திகள்

ஜூனியர் என்.டி.ஆரின் 31வது பட பூஜை

தினத்தந்தி
|
9 Aug 2024 2:44 PM IST

ஜூனியர் என்டிஆர், பிரசாந்த் நீல் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

நடிகர் ஜூனியர் என்.டி.ஆர், ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் நடித்து பிரம்மாண்ட வெற்றி கண்டார். கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகும் தேவரா எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது படத்தின் பின்னணி வேலைகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தேவரா படமானது வருகின்ற செப்டம்பர் 27-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. ஹிருத்திக் ரோஷனின் 'வார் 2' படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

இதற்கிடையில் ஜூனியர் என்டிஆர், கே. ஜி.எப் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு ஒப்பந்தமானார். இந்த படமானது ஜூனியர் என்.டி.ஆரின் 31வது படமாகும்.

ஆக்சன் நிறைந்த கதை களத்தில் உருவாகும் இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமும் நந்தமுரி தரகா ராமாராவ் ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்தின் பூஜை இன்று சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்நிலையில் என்.டி.ஆர்.நீல் (NTRNEEL) என்று சொல்லப்படும் இந்த படம் 2026 ஜனவரி 9ம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு கொண்டு வரப்படும் என்று பட குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்