< Back
சினிமா செய்திகள்
உலகத்திற்கு மகிழ்ச்சி... ஷாருக் கானை புகழ்ந்த பிரபல மல்யுத்த வீரர்
சினிமா செய்திகள்

உலகத்திற்கு மகிழ்ச்சி... ஷாருக் கானை புகழ்ந்த பிரபல மல்யுத்த வீரர்

தினத்தந்தி
|
27 Feb 2024 11:46 AM IST

என்னுடைய சமீபத்திய பட பாடல்களை உங்களுக்கு அனுப்பி வைக்க போகிறேன். நீங்கள் அதற்கு நடனம் ஆட வேண்டும் என்று ஷாருக் கான் கேட்டுக்கொண்டார்.

புதுடெல்லி,

நடிகர் ஷாருக் கான் நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடித்து, கடந்த ஆண்டில் வெளிவந்த பதான் திரைப்படம் அவருக்கு பெரும் புகழையும், பெயரையும் பெற்று தந்தது. தீபிகா படுகோனே மற்றும் ஜான் ஆபிரகாம் நடிப்பில் வெளியான பதான் படம் உலக அளவில், ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டியதுடன், 20-க்கும் மேற்பட்ட புதிய சாதனைகளையும் படைத்தது.

இதன்பின்னர், அவர் நடிப்பில் வெளியான ஜவான் படமும் வசூல் சாதனை படைத்தது. தமிழ் திரைப்பட இயக்குநர் அட்லீயின் அறிமுக படம் என்றளவில், இதில் ஷாருக் கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். நடிகர் விஜய் சேதுபதி, நடிகைகள் தீபிகா படுகோனே மற்றும் சான்யா மல்கோத்ரா உள்ளிட்டோரும் நடித்த இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

கடந்த ஆண்டு இறுதியில், ஷாருக் கான் நடிப்பில் வெளியான டுங்கி திரைப்படம் நேர்மறையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், உடற்பயிற்சி செய்து, உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் புகைப்படம் ஒன்றை சமீபத்தில், சமூக ஊடகத்தில் பகிர்ந்து ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றார்.

இந்நிலையில், பிரபல மல்யுத்த வீரர் மற்றும் நடிகரான ஜான் சேனா, தில் தோ பாகல் ஹை என்ற படத்தில் இடம் பெற்ற போலி சி சூரத் என்ற ஷாருக் கானின் பாடலை பாடினார். இதனை பார்த்து, ஷாருக் கான் எக்ஸ் சமூக ஊடகத்தில் தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

என்னுடைய சமீபத்திய பட பாடல்களை உங்களுக்கு அனுப்பி வைக்க போகிறேன். நீங்கள் அதற்கு நடனம் ஆட வேண்டும் என்று அதில், ஷாருக் கான் கேட்டுக்கொண்டார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில், எக்ஸ் சமூக ஊடகத்தில் ஜான் சேனா வெளியிட்ட பதிவில், உலகத்திற்கு நீங்கள் நிறைய தந்திருக்கிறீர்கள். நிறைய மகிழ்ச்சியை வழங்கியிருக்கிறீர்கள். நீங்கள் செய்த அனைத்திற்காகவும் உங்களுக்கு நன்றி என தெரிவித்து உள்ளார்.

அவர்கள் இருவருக்கு இடையேயான இந்த சாட்டிங்கை வலைதளங்களில் பலர் பகிர்ந்து கொண்டனர். இது தொடர வேண்டும் என கேட்டு கொண்டனர். சாட்டிங் பதிவை, ஆயிரக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர். ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து, அவர்களுடைய விமர்சனங்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்