< Back
சினிமா செய்திகள்
Joker 2 Trailer: Lady Gaga, Joaquin Phoenix Create Absolute Chaos

image courtecy:instagram@joaquinphoenixofflcial

சினிமா செய்திகள்

இணையத்தில் வைரலாகும் 'ஜோக்கர் 2' டிரெய்லர்

தினத்தந்தி
|
24 July 2024 3:09 PM IST

ஜோக்கர் படத்தின் 2-ம் பாகம் உருவாகியுள்ளது.

சென்னை,

பிரபல ஹாலிவுட் இயக்குனர் டூட் பிலிப்ஸ். இவர் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஜோக்கர்'. இப்படத்தில் கதாநாயகனாக ஜாக்குவான் பீனிக்ஸ் நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது.

இப்படத்தில் நாயகனாக நடித்து மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய ஜாக்குவன் பீனிக்ஸுக்கு ஆஸ்கர், கோல்டன் குளோப் உள்ளிட்ட பல விருதுகள் கிடைத்தன.

தற்போது, இந்த படத்தின் 2-ம் பாகம் உருவாகியுள்ளது. இந்நிலையில், அதே கூட்டணியில் உருவாகியுள்ள இரண்டாம் பாகத்தின் டிரெய்லரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. தற்போது இந்த டிரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படம், அக்டோபர் 4-ம் தேதி உலகளவில் வெளியாக உள்ளது.

மேலும் செய்திகள்