< Back
சினிமா செய்திகள்
விஜய்யின் மாஸ் லெவல் டான்ஸ் - வாரிசு அப்டேட் கொடுத்த ஜானி மாஸ்டர்
சினிமா செய்திகள்

விஜய்யின் மாஸ் லெவல் டான்ஸ் - 'வாரிசு' அப்டேட் கொடுத்த ஜானி மாஸ்டர்

தினத்தந்தி
|
14 Oct 2022 10:22 PM IST

இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார்.

சென்னை,

இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

'வாரிசு' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த மாத இறுதிக்குள் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துவிடும் எனக் கூறப்படுகிறது. இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் பதிவு ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அவர், வாரிசு திரைப்படத்தில் விஜய்யின் மாஸ் லெவல் நடனத்தைப் பார்க்க தயாராகுங்கள். இதை பார்த்தால் திரையரங்குகளில் யாரும் உட்கார்ந்து படம் பார்க்கமாட்டீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவை விஜய் ரசிகர்கள் இணையத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். 'பீஸ்ட்' திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த 'அரபிக்குத்து' பாடலின் நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்