பிரபு தேவாவுடன் இணைந்த 'ஜோ' பட நடிகை
|'சிங்காநல்லூர் சிக்னல்' படத்தில் 'ஜோ' பட நடிகை கதாநாயகியாக நடிக்கிறார்.
சென்னை,
இந்திய மைக்கேல் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் பிரபு தேவா. இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளது. விரைவில் இவர் நடித்துள்ள 'பேட்ட ராப்' படமும் வெளியாக உள்ளது.
இந்தப் படங்களைத் தொடர்ந்து அவர் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் படத்துக்கு 'சிங்காநல்லூர் சிக்னல்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் 'ஜோ' பட நடிகை பாவ்ய திரிகா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் மலையாள நடிகரான ஷைன் டாம் சாக்கோ மற்றும் ஸ்ரீமன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், பிரபு தேவா டிராபிக் போலீஸ் உடையில் இருக்கிறார். இதன் மூலம் இப்படத்தில் இவர் டிராபிக் போலீசாக நடிக்கிறார் என்பது தெரிகிறது.