ரசிகர்களுக்கு வேலை வாய்ப்புகள் - சிவகார்த்திகேயன் உறுதி
|சிவகார்த்திகேயன் டான், பிரின்ஸ் படங்களை தொடர்ந்து தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். அயலான், கமல்ஹாசன் தயாரிக்கும் படங்களும் கைவசம் உள்ளன. அயலான் நவம்பர் மாதம் திரைக்கு வருகிறது.
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் அளித்துள்ள பேட்டியில், "எனது நடிப்பை முழுமையாக வெளிப்படுத்தும் கதைகளுடன் புதிய இயக்குனர்கள் வருவதால் அவர்களின் படங்களில் நடிக்கிறேன். பெரிய டைரக்டர்களும் தற்போது என்னை அணுக தொடங்கி இருக்கிறார்கள்.
நான் இந்தி படத்தில் நடிக்கப்போவதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. நமக்கான சம்பளத்தை வாங்கிக்கொண்டு தயாரிப்பாளரின் பிரச்சினையை கண்டு கொள்ளமால் ஒதுங்கி இருக்க முடியாது. நான் நடிக்கும் படங்களின் லாப நஷ்டங்களில் எனக்கும் பங்கு இருக்கிறது. அதை தீர்த்து வைப்பது எனது கடமை.
நாடு முழுவதும் இருக்கும் எனது ரசிகர் மன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைத்து, அவர்களின் எதிர்காலம் வளமாகவும் நலமாகவும் அமைவதற்காக ஒரு அமைப்பை உருவாக்கி அதன் மூலம் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் திட்டம் உள்ளது.
மடோன் அஸ்வின் இயக்கிய மாவீரன் படத்தில் ஓவிய கலைஞராக நடித்து இருக்கிறேன். படத்தில் பேன்டசியான விஷயங்கள் நிறைய இருக்கிறது. ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் இருக்கும். சமூக அக்கறையான சில விஷயங்களும் உள்ளது. இது வழக்கமான படமாக இருக்காது. அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்'' என்றார்.