வில்லன் அவதாரம் எடுக்கும் ஜீவா
|நாக சைதன்யா - கிருத்தி ஷெட்டி நடிப்பில் வெங்கட் பிரபு தெலுங்கில் இயக்கி வரும் புதிய படத்தில் வில்லனாக நடிக்க ஜீவா ஒப்பந்தமாகி இருக்கிறார்.
'ராம்', 'ஈ', 'கற்றது தமிழ்', 'சிவா மனசுல சக்தி', 'கோ', 'நண்பன்', 'நீதானே என் பொன்வசந்தம்', 'என்றென்றும் புன்னகை', 'ஜிப்ஸி' போன்ற பல படங்களில் நடித்தவர் ஜீவா. இவர் பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரியின் மகனும் ஆவார்.
திரைக்கு வந்த காலத்தில் இருந்தே கதாநாயகனாக மட்டுமே ஜீவா நடித்துக் கொண்டிருக்கிறார். சில படங்களில் சிறப்பு தோற்றத்திலும் தலைகாட்டி இருக்கிறார். ஆனாலும் ஒரு முறை கூட அவர் எதிர்மறையான கதாபாத்திரங்களில் நடித்தது கிடையாது. அந்தக் குறை தற்போது நீங்க இருக்கிறது.
நாக சைதன்யா - கிருத்தி ஷெட்டி நடிப்பில் வெங்கட் பிரபு தெலுங்கில் இயக்கி வரும் புதிய படத்தில் வில்லனாக நடிக்க ஜீவா ஒப்பந்தமாகி இருக்கிறார். 'திடீரென ஜீவா ஏன் வில்லன் வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்?' என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். பட வாய்ப்புகள் குறைந்து விட்டதால் எடுத்த 'திடீர்' முடிவாக இருக்கலாமோ என்றும் விமர்சிக்கிறார்கள்.
எது எப்படியோ, கலகலப்பாக நடிக்கும் ஜீவா வில்லன் கதாபாத்திரத்தில் எப்படி மிரட்டப் போகிறார்? என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.