சுந்தர்.சி இயக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு..!
|இயக்குனர் சுந்தர்.சி இயக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சுந்தர்.சி தற்போது மூன்று கதாநாயகர்கள் மற்றும் மூன்று கதாநாயகிகளை மையமாகக் கொண்ட படமொன்றை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும் இவர்களுடன் ரைசா வில்சன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத், சம்யுக்தா சண்முகம், திவ்யதர்ஷினி (டிடி), அருணா பால்ராஜ், பேபி விர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தை நடிகை குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பென்ஸ் மீடியா இணைந்து தயாரித்துள்ளது.
ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு 'காபி வித் காதல்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.