பிளாக்பஸ்டர் வெற்றியை பதிவு செய்த 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'... புதிய வீடியோவை வெளியிட்ட படக்குழு
|'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பதிவு செய்துள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டுள்ளது.
சென்னை,
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தீபாவளியை முன்னிட்டு, 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியது. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை இந்த படம் உலகளவில் ரூ.66 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பதிவு செய்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்த மாபெரும் வெற்றியை அளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் புதிய வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில், 'அது மிரண்டால் காடும், நாடும் கொள்ளாது. அது யானை, அது சினிமா. எங்கள் சினிமாவையும், யானையையும் கொண்டாடியதற்கு கோடி நன்றிகள்' போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.