< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
சர்வதேச திரைப்பட விழாவில் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' திரைப்படம்...!
|21 Dec 2023 5:18 PM IST
சர்வதேச அளவில் முக்கிய மற்றும் பிரபலமான திரைப்பட விழாவாக இது பார்க்கப்படுகிறது.
சென்னை,
ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழா அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 25-ம் தேதி துவங்கி பிப்ரவரி 4-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. சர்வதேச அளவில் முக்கிய மற்றும் பிரபலமான திரைப்பட விழாவாக இது பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் "லைம்லைட்" பிரிவில் திரையிட 'விடுதலை' , மற்றும் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படங்கள் தேர்வாகி உள்ளன.
இதேபோன்று "பிக் ஸ்கிரீன் " பிரிவில் இயக்குனர் ராமின் "ஏழு கடல் ஏழு மலை" படம் திரையிட தேர்வாகி இருக்கிறது. சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் திரையுலகின் மூன்று படங்கள் தேர்வாகி இருப்பது ரசிகர்கள் இடையே பாராட்டை பெற்று வருகிறது.