< Back
சினிமா செய்திகள்
ஜீவா நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
சினிமா செய்திகள்

ஜீவா நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

தினத்தந்தி
|
7 Oct 2024 7:51 PM IST

இந்த படத்தில் அர்ஜுன் மற்றும் ராஷி கன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சென்னை,

'ஆசை ஆசையாய்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஜீவா. இவர் 'சிவா மனசுல சக்தி, கற்றது தமிழ், கொரில்லா, ரவுத்திரம், கலகலப்பு 2 போன்ற படங்களில் நடித்து தனக்கென ரசிகர்களை உருவாக்கி வைத்துள்ளார். இவர் தற்போது இயக்குனர் பா.விஜய் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார்.

இப்படத்திற்கு 'அகத்தியா' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் அர்ஜுன் மற்றும் ராஷி கன்னா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்த நிலையில் வேல்ஸ் நிறுவனம் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படம் ஹாரர் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகிறது. விரைவில் இப்படம் குறித்த அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.

மேலும் செய்திகள்