< Back
சினிமா செய்திகள்
`ஜெய்பீம் மணிகண்டன் நடிக்கும் புதிய படம்
சினிமா செய்திகள்

`ஜெய்பீம்' மணிகண்டன் நடிக்கும் புதிய படம்

தினத்தந்தி
|
11 Aug 2023 1:10 PM IST

சூர்யாவுடன் `ஜெய்பீம்' படத்தில் நடித்து பிரபலமான மணிகண்டன், `குட்நைட்' படத்தில் கதாநாயகனாக நடித்து இருந்தார். இந்தப் படத்துக்கு வரவேற்பு கிடைத்தது. அடுத்து இன்னொரு புதிய படத்திலும் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதில் நாயகியாக ஶ்ரீகவுரி பிரியா நடிக்கிறார். கண்ணாரவியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்தப் படத்தை பிரபுராம் வியாஸ் டைரக்டு செய்கிறார். படம் பற்றி அவர் கூறும்போது, ``தற்கால காதல் அதில் நடக்கும் நிகழ்வுகள் ஆகியன குறித்த விவாதத்தை சுவாரசியமான திரைக்கதை மூலம் சொல்லக்கூடிய படமாக இது இருக்கும்'' என்றார். நசரேத் பசிலியான், மகேஷ்ராஜ் பசிலியான், யுவராஜ் கணேசன் ஆகியோர் தயாரிக்கிறார்கள்.

இசை: ஷான் ரோல்டன், ஒளிப்பதிவு: ஸ்ரேயாஸ் கிருஷ்ணா. சென்னை மற்றும் கோவா அருகே உள்ள கோகர்ணா பகுதிகளில் படப்பிடிப்பு நடக்க உள்ளது. படப்பிடிப்பை நடிகர் விஜய்சேதுபதி `கிளாப்' அடித்து தொடங்கி வைத்தார்.

மேலும் செய்திகள்